நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் பூரணி பொற்கலை திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்துள்ள ஏரிப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பூரணி பொற்கலை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மதியம் 12.30 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 6.௦௦ மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, ௯.௦௦ மணிக்கு அர்ஜூணன் திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏரிப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மாலை 6.௦௦ மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.ஏற்படுகளை கோவில் தனி அதிகாரி கார்த்திகேயன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.