பதிவு செய்த நாள்
28
ஏப்
2016
12:04
ஓசூர்: ஓசூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள, குருவால்முகி, தோப்பம்மா தேவி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள கொத்தப்பள்ளி கிராமத்தில், குருவால்முகி, தோப்பம்மா தேவி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் (ஏப்., 26) துவங்கியது. விழாவையொட்டி கணபதி ஹோமம், பூர்ணாகுதி, சுதர்சன ஹோமம், அஷ்டபந்தனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை வேதபாராயணம், கணபதி ஆராதனை, கலச ஆராதனை, கணபதி ஹோமம், மகாபூர்ணாகுதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 10.30 மணி முதல், 11 மணிக்குள், கும்பாபி?ஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தோப்பம்மா, குருவால்முகி பக்த மண்டலி குழுவினர் செய்திருந்தனர்.