Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் ... திருமலையில் பத்மாவதி தாயார் பரிணயோத்சவம்; குதிரை வாகனத்தில் ஸ்ரீனிவாசப் பெருமான் திருமலையில் பத்மாவதி தாயார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் ஆட்சி துவக்கம்: மகுடம் சூட்டப்பட்டு பட்டாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் ஆட்சி துவக்கம்: மகுடம் சூட்டப்பட்டு பட்டாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2026
09:04

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம், தாரகைக்கு அம்மனாக மகுடம் சூட்டப்பட்டு, அவர் மதுரையின் அரசியாக பொறுப்பேற்கும் விழாவாகும். விழா நாட்களில் அம்மன் நான்கு மாதங்களும், பின்னர் சுந்தரேஸ்வரர் எட்டு மாதங்களும் மதுரையை ஆட்சி செய்வதாக ஐதீகம். இந்த வருடம் இன்று இந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு நாளை காலை அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மேலமாசிவீதி கட்டுச்செட்டி மண்டபத்தில் எழுந்தருளினார்.  அபிஷேகத்திற்கு பின், அம்மனுக்கு பரிவட்டம் மட்டும் சாத்தப்பட்டு, மாலை 3 மணிக்கு கோயிலுக்கு புறப்பாடு நடைபெற்றது. மாலை 6 மணி முதல் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில், திருமலை நாயக்கர் வழங்கிய ரத்ன கிரீடத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7.36 மணிக்கு அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.   அம்மனுக்கு பரிவட்டமும், வெற்றிக்கு அறிகுறியாக வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அம்மனிடமிருந்து செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார், இன்று துவங்கும் அம்மன் அரசாட்சி ஆவணி மாதம் வரை நடக்கும். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar