நபிகள் நாயகம் அவர்கள், வாழ்வுக்கு தேவையான அரிய போதனைகளைச் செய்தார்கள். அந்த அருள்மொழிகளில் சிலவற்றைக் கேளுங்கள். * மலர்ந்த முகத்துடன் இருப்பீராக! மலர்ந்த முகத்தவரை அல்லாஹ் நேசிக்கின்றான். கடுகடுத்த முகத்துடையவர்களை வெறுக்கின்றான். * உங்களில் இறந்துவிட்ட அன்பர்களுக்காக தான தர்மம் செய்வீராக! வானவர்கள் அதன் நன்மைகளைச் சுமந்து சென்று சேர்ப்பார்கள். இதனால், இறந்தவர்கள் எங்களின் மண்ணறையை ஒளிவாக்கிய பிள்ளைகளுக்கு பாவமன்னிப்பளிப்பாயாக, இறைவா! என பிரார்த்தனை புரிவார்கள். அவ்வாறு செய்ய மறந்தவர்களின் உறவினர்களோ, நாங்கள் விட்டுச்சென்ற செல்வங்கள், சொத்து செல்வங்களை அனுபவித்துக் கொண்டு எங்களை மறந்தவர்களுக்கு சாபம் உண்டாகட்டும், என்று சபிப்பார்கள். * கண்ணில்லாதவர்களுக்கு உதவி செய்பவரின் நுõறு குற்றங்கள் மன்னிக்கப்படும். * அதிகமான துõக்கம் உள்ளத்தை மரணிக்கச் செய்யும். அதனால் கவலைகள் உண்டாகும். * உமது செல்வங்களைக் கண்டு சந்தோஷம் அடையாதீர். மற்றவரின் பொருளுக்கு சிறிதும் ஆசைப்படாதீர். அல்லாஹ் அதன் மீது சந்தோஷம் அடைவதில்லை. * வாழைப்பழம் எப்போதும் தின்று வருவீராக! அதனால் கபம் நீங்கி புத்திக்கூர்மையுடன் மதிநுட்பமும் கிடைக்கிறது.