Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டுதல் நிறைவேறாததற்கு காரணம் ... லட்சுமி பூஜையில் மாதுளம்பழம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குறையொன்றுமில்லை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2016
03:05

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இருந்த தொண்டர்களில் ஒருவர் குமரேசன். இவர் காஞ்சிப் பெரியவருக்கு தொண்டு செய்வதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இவரை ஒருநாள் பெரியவர் அழைத்தார். “நீ இந்த சந்நியாசியை நம்பிட்டு இருக்கியே...! கல்யாணமாகி குழந்தைகள் வேற இருக்கே!  உனக்குன்னு சொந்தமா கிரஹம்(வீடு) ஒன்று வேண்டாமா....” என்று கேட்டார். “பெரியவா இருக்கறப்போ எனக்கென்ன குறைச்சல்” என்று பதிலளித்தார் குமரேசன். சில நாட்கள் கடந்ததும், பக்தை ஒருவர் பெரியவரைத் தரிசிக்க வந்தார். அவரது பெயர் சர்வமங்கள ஜானகியம்மாள். பணவசதி மிக்க அவரிடம் பெரியவர், “இங்க குமரேசன்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்கு சின்ன அளவில ஒரு வீடு கட்டிக் கொடுக்கணும்,” என்றார். அதை ஏற்ற ஜானகியம்மாளும் காஞ்சிபுரம் பங்காரம்மன் தோட்டம் என்னும் இடத்தில் வீடும், கிணறுமாக கட்டிக் கொடுத்தார். அந்தக் கிணறு இன்று வரை வற்றாத நிலையில் இருக்கிறது. புதிய வீட்டில் கிரகப்பிரவேசமும் நடந்து முடிந்தது. ஆனால், குமரேசன் அந்த வீட்டில் குடியேறவில்லை. இந்த விஷயம் பெரியவரின் கவனத்திற்கு வந்தது. குமரேசனை அழைத்தார். “கிரகப்பிரவேசம் நடந்தும் ஏன் குடியேறலை... விருப்பமில்லையா” என்று கேட்டார்.“பெரியவா.... உங்க பாதம் பட்டாதான் நான் குடியேறுவேன்,” என்று தீர்மானமாக சொல்லி விட்டார் குமரேசன். ஒருநாள் திடீரென குமரேசனிடம், “நாளை உன் கிரகத்துக்கு(வீட்டிற்கு) வர்றேன். ஏற்பாடு பண்ணு,” என்று உத்தரவிட்டார் பெரியவர். குமரேசன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. வீடு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மாக்கோலமும், மாவிலைத்தோரணமும் கட்டி அழகுபடுத்தப்பட்டது. மடத்தில் இருந்து ஐந்து கி.மீ., துõரத்தில் இருந்த குமரேசன் வீட்டிற்கு வருகை தந்தார் பெரியவர். ஆத்ம பூஜை செய்து பிட்சையும் ஏற்றுக் கொண்டார். நான்கு மணி நேரம் அங்கேயே இருந்து, அந்தப்பகுதி பக்தர்களுக்கு ஆசி அளித்தார். நாமும் மனம் என்னும் வீட்டில் பெரியவரின் பாதச்சுவடுகளை எப்போதும் பதிப்போம். அவர் அருளால் குறையில்லாத நிறைவாழ்வு பெறுவோம்.(மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar