Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி பூஜையில் மாதுளம்பழம் ... வறுமை அகன்று.. செல்வம் சேர
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2016
03:05

*கடவுள் ஒருவரே. அவரைத் தவிர வேறு யாரும் நமக்குத் துணையில்லை. நாம் அனைவரும் ஒரே குலம். இதில் ஒருவருக்கு ஒருவர் உயர்வோ, தாழ்வோ கிடையாது.
*செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலைஆனவர். நிலை இல்லாத பணத்தை தேடும் மனிதனுக்கு கடவுளிடம் நாட்டம் சிறிதும் இருக்காது.
*சொர்க்கமும் நரகமும் எங்கோ வானுலகத்தில் இருப்பதாக எண்ண வேண்டாம். இன்பமும், துன்பமும் அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.
*கடவுளை நோக்கி மனதைச் செலுத்துவதில் துன்பத்தின் பங்கு அதிகமானது. கடவுளை அறிந்தவனே தன்னை அறிந்தவனாகிறான். தன்னை அறியாதவன் ஏதும் அறியாதவனே.
*நற்குணம் இருப்பதற்காக செருக்கு கொள்ள வேண்டாம். உங்களை விடவும் மிக
நல்லவர்கள் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.
*பிறரைக் கீழானவர்களாக கருதுபவர்கள், நிச்சயம் ஒருநாள் கீழ்மையடைந்து வருந்த நேரிடும்.
*அறிவாளி என்பவன் பிறரை அவமதிக்க விரும்ப மாட்டான். பொறாமை அவனிடத்தில் இருக்காது. நிலையற்ற பொருள்களில் விருப்பம் கொள்ள மாட்டான்.
*கர்வம், ஊதாரித்தனம், சோம்பல், பேராசை கொண்டவர்களை முட்டாள்கள் என்றே சொல்ல வேண்டும். இவர்கள் அறியாமையால் தாழ்ந்த நிலையை அடைகிறார்கள்.
*தன்னம்பிக்கையற்ற மனிதர்கள் உலகில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராகி விடக்கூடாது.
*பிறரைப் பற்றி மட்டும் சிந்திக்கும் மனிதன் பாவியாகிறான். தன்னை உணர்ந்து மகிழ்பவனே வாழ்வின் இறுதியில் ஞானியாகிறான்.
*கடவுள் உங்களுக்குள் இருந்து, நீங்கள் செய்யும் செயல்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் எப்போதும் மனத்துõய்மையுடன் இருங்கள்.
*பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தர்மம் செய்வது கூடாது. மனித நேயத்துடன் தர்மம் செய்பவருக்கே மனதில் நிம்மதி நிலைக்கும்.
*சூரியனும், சந்திரனும் காலம் தவறாமல் ஒழுங்காக கடமையைச் செய்கின்றன. ஆனால் பகுத்தறிவு இருந்தும் மனிதன் கடமையாற்றத் தவறுவது ஏனோ தெரியவில்லை.
*சாதுவானவர்கள் மனம் நோகும்படி நடப்பவர்கள் மறுபிறவியில் அசுரனாகப் பிறப்பார்கள்.
*விடாப்பிடியாகக் கடவுளைப் பற்றிக் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.
*பொன், மண், பெண், புகழ் ஆசைகளில் சிக்கி விட்டால் அதிலிருந்து மீண்டு வருவது என்பது இயலாத ஒன்று.
*பணிவு, நேர்மை, பொறுமை ஆகிய நற்குணங்களைப் பின்பற்றினால் இப்பிறவியில் மட்டுமில்லாமல் மறுபிறவியிலும் பேரின்பம் உண்டாகும். (மகான் சாந்தானந்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar