பதிவு செய்த நாள்
04
மே
2016
12:05
ஊட்டி: தென்னகத்தின் கல்வாரியில், ஆண்டு திருவிழா விமரிசையாக நடந்தது. தென்னகத்தின் கல்வாரி என, அழைக்கப்படும், ஊட்டி காந்தள் குருசடி திருத்தலம், கடந்த, 1933, அக்., 27ம் தேதி திறக்கப்பட்டது. திருத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், கடந்த, 1939, மே., 5ம் தேதி,புனித சிலுவை அமைக்கப்பட்டது. இந்த சிலுவையின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன என்ற நம்பிக்கை, கிறிஸ்தவர்கள் மத்தியில் உள்ளது. இதனால், சிலுவை பொருத்தப்பட்ட நாளில், ஆண்டுதோறும் திருத்தல ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, 83வது ஆண்டு விழா, கடந்த, 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாளான நேற்று காலை, நேற்று, 10:30 மணிக்கு மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது; 10 குருக்கள் பங்கேற்றனர். திருப்பலியில், பக்தர்கள், பொதுமக்கள் என, திரளானோர் பங்கேற்றனர்.