Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க ... மதுரைவீரன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மதுரைவீரன் சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துடைப்பத்தால் அடித்துக்கொண்ட உறவினர்கள்: கோயில் விழாவில் வினோதம்!
எழுத்தின் அளவு:
துடைப்பத்தால் அடித்துக்கொண்ட உறவினர்கள்: கோயில் விழாவில் வினோதம்!

பதிவு செய்த நாள்

05 மே
2016
11:05

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவில், மாமன்- மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் துடைப்பத்தால், ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வினோத நிகழ்ச்சியை நடத்தினர். மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா மூன்று நாட்கள் நடந்தது. அம்மனுக்கு கரகம் எடுத்து, பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி, முளைப்பாரி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முக்கிய நிகழ்வாக, மூன்றாம் நாளில் மாமன்- மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் கோயில் முன் கூடினர். ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு, உடல் முழுவதும் சேறு பூசி, கரியை முகத்தில் தடவினர். கோயில் முன் விழுந்து வணங்கி கையில் பழைய துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, மாமன் - மைத்துனர் உறவு முறை உள்ளவர்களை அடித்தனர். அடிபடுபவர்கள் யாரும் அடிப்பவர்கள் மீது கோபப்படுவதில்லை.  மைக்ஷெட் பாடல் ஒலிக்கும் ஆட்டத்துடன் பல மணி நேரம் நடந்த நிகழ்ச்சியை காண வெளியூரில் இருந்து ஏராளமானவர்கள் வந்தனர். வெளியூர்க்காரர்கள், உறவு முறை அல்லாதவர்களை உள்ளூர்வாசிகள் தொந்தரவு செய்வதில்லை. மாடுகளை கயிற்றில் கட்டி கூட்டிச்செல்வது போல் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டி கூட்டிச்சென்று அடிக்கும்போது அடிபடுபவர்கள் கோபப்படாமல் இருப்பதால், அவர்களின் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும் என்ற நம்பிக்கையில் இது நடத்தப்படுகிறது. இதனை சிலர் முத்தாலம்மனுக்கு நேர்த்திக்கடனாக செய்வதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ‘‘காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar