முருகப்பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம், அந்நாளில், முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டினால் வேண்டிய வரம் கிட்டும். குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாக நாளில் பால்பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோயிலுக்கு சென்று வேண்டினால் அடுத்த விசாகத்திற்குள் மடியில் குழந்தை இருத்தல் உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால் விரைவில் மணம் கிட்டும். இவ்விரதத்தை ஆண்களும் இருக்கலாம். வைகாசி விசாக நாளில் ஒரு வேளை உணவு உண்டு முருகனை தியானித்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும். வைகாசி விசாகத் திருநாளில் குடும்பத்தினர் அனைவரும் கூட்டாக அமர்ந்து இந்த பிரார்த்தனையை செய்தால் குமரன் அருள் பெறலாம்.