பவானி: பவானி, செல்லியாண்டியம்மன்-மாரியம்மன் கோவில் மூலவர் சிலை அம்மனுக்கு, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதியதாக தங்க கவசம் நேற்று அணிவிக்கப்பட்டது. பவானியை சேர்ந்த அக்னி ராஜா குடும்பத்தார், இதை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அமாவாசை தினமான நேற்று காலை, மூலவரான மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து புதிய தங்க கவசம் சாத்தப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பவானி பகுதியை சேர்ந்த, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.