பதிவு செய்த நாள்
09
மே
2016
12:05
திண்டுக்கல்: தேனி மாவட்டம் வீரபாண்டி கோயில் திருவிழாவையொட்டி நாளை (மே 10) முதல் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மதுரை மண்டல நிர்வாக இயக்குநர் வின்சென்ட் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தேனி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவை காண ஏராளமான வெளியூர் பக்தர்கள் வருவர். அவர்களின் வசதிக்காக திண்டுக்கல்லில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் மே 17 வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், போடி, கூடலுார், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சின்னமனுார், தேவாரம் மற்றும் உத்தமபாளையம் ஆகிய இடங்களில் இருந்து இரவும், பகலும் இயக்கப்படும். பக்தர்களுக்கு உதவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உடனடி தொடர்புகளுக்கு வயர்லெஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.