திருப்பரங்குன்றத்தில் ரூ.19 லட்சம் உண்டியல் வருவாய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2016 11:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அதன் துணை கோயில்கள் சொக்கநாதர் கோயில், குருநாதசுவாமி கோயில்களில் 36 உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நடந்தது. கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை, உதவி கமிஷனர் இளையராஜா முன்னிலை வகித்தனர். இதில் 19 லட்சத்து 23 ஆயிரத்து 766 ரூபாய் ரொக்கம், தங்கம் 157 கிராம், வெள்ளி ஒரு கிலோ 352 கிராம், கோயிலுக்கு வருமானமாக கிடைத்தது. கோயில் ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், ஐயப்பா சேவா சங்கத்தினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.