மந்தாரக்குப்பம் கோவிலில் 21ம் தேதி வைகாசி விசாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2016 05:05
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வரும் 21ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9:00 மணியளவில் பால்குட ஊர்வலம், சுவாமிக்கு பாலாபிஷேகம், பகல் 11:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 5:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை அன்னதான குழு மற்றும் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.