ஸ்ரீவைகுண்டம் : திருக்கோளுர் ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் கோயில் ஆவணி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று நடந்தது நவதிருப்பதி கோயில்களில் எட்டாவது திருப்பதியான ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோயில் ஆவணி பெருந்திருவிழா கடந்தவாரம் கொடியேற்றதுடன் தொடங்கியது. நேற்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம்மும் 6மணிக்கு நித்தி யல் திருவாராதணை,8.10மணிக்கு தீர்த்தவிணியோகம் நடந்தது 8.30 மணிக்கு சுவாமி ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் தேரில் எழுந் தருளினார். 8.50மணிக்கு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் திரு தேரை வடம் படித்து இழுத்தனர். தேர்முக்கியவீதிகள் வழியாக மதியம்11.30நிலையை அடைந்தது இந்தநிகழ்சியில் நிர்வாக அதிகாரி ராமசுப்பர மணியன்,டிவிஎஸ் ஆலோசகர் முருகன் இஞ்சினியர் சுப்பு, ஸ்லத்தார் திருவாய் மொழிபள்ளை, ஸ்ரீவைகுண்டம் ஸ்லத்தார் வெங்கடாச்சாரி, ஆழ்வார்திரு நகரி பேரூராட்சிதலைவர் ஆதிநாதன்,முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் முருகேசன், பேச்சிமுத்து உள்படபலர் கலந்து கொண்டனர்.