Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை ... பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.20 கோடி பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.20 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை விழா
எழுத்தின் அளவு:
திருத்தணி கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை விழா

பதிவு செய்த நாள்

18 மே
2016
11:05

திருத்தணி: கங்கையம்மன் கோவிலில், நேற்று நடந்த ஜாத்திரை திருவிழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். திருத்தணி, காந்தி நகர், நல்லதண்ணீர் குளக்கரையில் உள்ளது கங்கையம்மன் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்தாண்டின், ஜாத்திரை திருவிழா, நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, காலை 8:30 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணி முதல், மாலை 4:00 மணி வரை, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும், அம்மன் பூ கரகம் பேண்டு வாத்தியத்துடன், நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தது. அப்போது பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், தீபாராதனை நடத்தியும் வழிபட்டனர். விழாவில், முருகப்ப நகர், காந்தி ரோடு, கலைஞர் நகர், கச்சேரி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல், திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை கிராமத்தில் நடந்த ஜாத்திரை திருவிழாவில், களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar