பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் 20 நாட்களில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 20 லட்சத்து 91 ஆயிரம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 710 கிராம், வெள்ளி 7,800 கிராம், வெளிநாட்டு கரன்சி 288, ரொக்கமாக ரூ. ஒருகோடியே 20 லட்சத்து 91 ஆயிரத்து 276 கிடைத்துள்ளது. இதில் தங்கம் மற்றும் வெள்ளியிலான பெரியபாதம், வேல், சுவாமி சிலைகள் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இணை ஆணையர்கள் பச்சையப்பன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.