பதிவு செய்த நாள்
21
மே
2016
12:05
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வடுகப்பட்டியில், வரதராஜ பெருமாள், சப்த கன்னிமார்கள், கூலிப்பட்டியில் கம்பத்துராயன் கோவில், வகுரம்பட்டியில் வீரமாத்தியம்மன், பெரியாண்டவர், நல்லையன் சுவாமி கோவில்களின் திருவிழா துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தும் வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 6 மணிக்கு, சிறப்பு பூஜையும், 9 மணிக்கு பிறந்த வீட்டு பெண் பிள்ளைகளுக்கு மடிப்பழம் வழங்குதல், மாலை, 3 மணிக்கு, சுவாமி கும்பிடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (மே, 22) காலை, 6 மணிக்கு கூலிப்பட்டி கம்பத்துராயன் கோவிலில் கிடாவெட்டு, சிறப்பு பூஜையும், காலை, 9 மணிக்கு, வகுரம்பட்டி வீரமாத்தியம்மன், பெரியாண்டவர், நல்லையன் சுவாமி கோவிலில் முப்பூஜை பெருவிழா, சிறப்பு பூஜை நடக்கிறது.