தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருத்தேர் வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2016 05:05
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருத்தேர் வீதியுலா நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனுாரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 8ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் மாலை சிம்ம வாகனம், சேஷ வாகனம், அனுமந்த் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 19ம் தேதி மாலை நாராயணன், ஸ்ரீ தேவி–பூதேவி சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய விழாவான திருத்தேர் உற்சவம் இன்று நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் வீதியுலா மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா முனுசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.