சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2016 10:05
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வைகாசி விசாக விழா மே 15 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் மூஷிகம், அஸ்வம், சிம்மம், பூதம், அனந்த சயனம், ரிஷபம், கேடயம், வெள்ளி வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். ஐந்தாம் நாள் திருக்கல்யாணம், 6 ம் நாள் சமணர்கள் கழுவேற்றம் நடந்தன. நேற்று காலை தேரடி பூஜை நடந்தது.மாலை 4.30 மணிக்கு சிங்கம்புணரி கிராமத்தினர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். விநாயகர், பிடாரிஅம்மன் சப்பரத்திலும், பூரணாதேவி, புஷ்கலாதேவியுடன் சேவுகப்பெருமாள் அய்யனார் தேரில் ரத வீதிகளில் பவனி வந்தார். மாலை 5.40 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பக்தர்கள் தேங்காய்களை கல் மேடை மீது வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.