ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. விழாவையொட்டி மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவர் யக்ஞவராகன் தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பின்னர் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.