திருநள்ளார் நளன் குளம் எதிரில் மேற்கூரை அமைக்கும் பணி நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2016 11:05
காரைக்கால்: திருநள்ளார் நளன் குளம் விநாயகர் கோவில் முன்பு பக்தர்கள் சிரம் இன்றி தரிசனம் செய்ய ரூ.15 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணி முடிவடைந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனீஸ்வர பகாவன் பக்தர்களுக்கு தனி சன்னதியில் அ ருள்பாலித்து வருகிறார். நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சனிக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் மூலம் நளன் குளத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வெயில், மழை காலங்களில், பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய நிரந்தர மேற்கூரை அமைக்கு பணிகள் நடந்தது. ரூ.15 லட்சம் மதிப்பில் ௬௦௦ மீட்டர் துாரத்திற்கு மேற்கூரை அமைக்கப்பட்டது. இந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில் ‘திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி வரிசையில் நின்று, தரிசனம் செய்ய கடந்த ஆண்டு நளன் குளம் விநாயகர் கோவிலில் தற்காலிகமாக பந்தல் அமைக்கப்பட்டது. பக்தர்களுக்கு நிரந்தர மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. பணி தற்÷ பாது முடிவடைந்துள்ளது. இதனால், வெயில், மழை பாதிப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்’ என்றார்.