பதிவு செய்த நாள்
27
மே
2016
11:05
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு செல்வவிநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு குப் புசாமி லே–அவுட்டில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில் மற்றும் நாகதேவதை, நவக்கிரக சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந் தது. விழாவை யொட்டி நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு கும்ப அலங்காரம், முதற்கால யாகபூஜை, மகா பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, வேதிகா பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, 9:00 மணிக்கு மகா பூ ர்ணாஹூதி, மகா தீபாராதனை, 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, 9:50 மணிக்கு செல்வ விநாயகர், நாகதேவதை, நவக்கிரக சுவாமிகளுக்கு கும்பாபி ஷேகம் நடந்தது. பின்னர் 10:05 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (27 ம் தேதி) முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்க்கிறது.