பதிவு செய்த நாள்
28
மே
2016
10:05
விருத்தாசலம்: விருத்தாசலம், பெரியார் நகரில் உள்ள, ராஜகோபால சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது. வைகாசி பி ரம்மோற்சவம், கடந்த 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதியுலாவும் நடந்து வந்தது. தொடர்ந்து, நேற்று காலை, ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 8:00 மணிய ளவில், உற்சவமூர்த்திகள், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்துச் சென்றனர்.