திண்டிவனம்: திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், கடந்த ௧௯ம் தேதி பிரமோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் மூலவரான பெருமாளுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பல்லக்கு, சிம்மம், அனுமன், நாக வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த ௨௩ம் தேதி கருடசேவை நிகழ்ச்சியும், நேற்று முன் தினம் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், பி.ஆர்.எஸ். துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், ராம் டெக்ஸ் துணிக்கடை தியாகராஜன், வெங்கடேசன், நகர் மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.