காரைக்கால்: காரைக்கால் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர்பவனி நடந்தது. காரைக்கால் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் கடந்த 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆண்டு பெருவிழா நடைபெற்றது. கடந்த 20ம் தேதி சிறப்பு திருப்பலி தொடங்கி கொடியோற்றத்துடன் விழா தொடங்கியது. 21ம் தேதி முதல் தினம் தேர்பவனி, திருப்பலி, விண்ணேற்பு ஞாயிறு, நற்கருணை ஆசீர், திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காரைக்கால் துணை பங்கு குரு திரில் தலைமையில் மின் அலங்கார தேர்பவனி, நற்கருணை ஆசிர் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.