அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2016 12:05
திருவண்ணாமலை: அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று முதன் முதலாக திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது, கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு, பின் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி நடந்து வரும் நிலையில், முதன் முதலாக கோவிலுக்கு வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர், பணி குறித்து எந்த ஆய்வும் நடத்தாமல், பெயரளவுக்கு கூட பணிகளை பார்வையிடாமல் சென்றார்.