பதிவு செய்த நாள்
02
ஜூன்
2016
12:06
அனுப்பர்பாளையம்: பகவானை சரணாகதி அடைந்தால், நிச்சயம் நம்மை காப்பார், என, ஆன்மிக சொற்பொழிவாளர் வாசுதேவன், பேசினார். ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், ஸ்ரீ சத்ய சாயி பாபாவின்,"ஸ்ரீ சத்ய சாயி ஸப்தாஹ தேவாமிர்தம், ஆன்மிக சொற்பொழிவு, நல்லூர்ஸ்ரீ சத்ய சாயி பஜனா மண்டலியில், கடந்த, 28ல் துவங்கியது; நாளை, நிறைவடைகிறது. இவ்வைபவத்தின் நான்காம் நாளில், "நவ விதி பக்தி என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் வாசுதேவன் பேசியதாவது: சிறு வயதிலேயே, பக்தியை கொண்டு வர வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், பகவானை பூஜிக்க வேண்டும். பகவானை, நம் நண்பன் போல் பாவித்து, குறைகள், செய்த தவறுகளை எடுத்து கூறவேண்டும். "நண்பனாக நினைத்து என்னை காப்பாற்று பகவானே என வேண்டி னால், அவனருள் கிடைக்கும்; பிரச்னைகளும் தீரும். ஜல்லடையிலும் தண்ணீர் எடுத்து செல்லலாம் என்றார் பகவான்; அது எப்படி? தண்ணீர் பனிக்கட்டியாகும்போது, ஜல்லடை யில் எடுத்து செல்லலாம்; ஆனால், தண்ணீர், பனிக்கட்டியாகும் வரை காத்திருக்க வேண்டும். அதுபோலவே, பக்தி செய்து, பகவான் அருள் கிடைக்க நாமும் காத்திருக்க வேண்டும். ஐந்து விரல்களில், யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. ஒவ்வொரு விரலும், தனது பெருமைகளை கூறியது. கடைசியாக, சுண்டு விரலும், தானே பெரியவன் என்றது. மற்ற விரல்கள், "அதெப்படி என்று கேட்டன. "பகவானை தரிசிக்கும் போது, நானே முதலில் இருக்கிறேன், என, சுண்டு விரல் கூறியது. பகவானிடம் சரணாகதி அடைந்தால், அவர் நிச்சயம் நம்மை காப்பாற்றுவார். இவ்வாறு, அவர் பேசினார்.