பதிவு செய்த நாள்
06
ஜூன்
2016
12:06
சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் வைகாசி விழா ஜூன்.,5 கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயில் வைகாசி விழா கொடியேற்றம் போது மேளதாளத்துடன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை பட்டர் சுப்பிரமணியன் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர். உதவி ஆணையர் ஹரிஹரன், செயல் அலுவலர் முருகன் உடன் இருந்தனர். 11 நாட்கள் நடக்கும் இவ்விழா 15ம் தேதி உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறுகிறது. தினமும் சுவாமி புறப்பாடு, ரிஷப, காமதேனு வாகனங்களில் வீதி உலா வருதல், கழுகேற்றம் நடக்க உள்ளது. 11ல் கேடயத்தில் அம்பாள் புறப்பாடு, ரிஷப வாகனத்தில் சுவாமி பிரியா விடையுடன் தபசு காட்சி, நள்ளிரவு ஒரு மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 13 காலையில் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை சிவ தொண்டர்கள் செய்கின்றனர்.