பதிவு செய்த நாள்
06
ஜூன்
2016
12:06
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் நடத்துவது சம்மந்தமாக அனைத்து துறையினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (5ம் தேதி) இரவு கருட சேவை நடந்தது. நாளை (7ம் தேதி) காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருத்தேர் உற்சவத்தை நடத்துவது சம்மந்தமான ஆலோசனை கூட்டம், சிங்கவரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் சிவக்குமார், மின் வாரிய போர்மேன் துரை, நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் சேகர், இன்ஸ்பெக்டர் பூபதி, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கணேசன், வி.ஏ.ஓ., ரங்கநாதன், தேர் திருப்பணிக்குழு குணசேகர், ஏழுமலை, இளங்கீர்த்தி மற்றும் சுகாதாரத் துறையினர், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர், தேர் செல்லும் பாதைகளை ஆய்வு செய்தனர். பள்ளம் மேடுகளை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்தை கேட்டு கொண்டனர்.