திருவேடகம்: திருவேடகம் ஷீரடி சாய்பாபா கோயிலில் 7 வது ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
உலக நன்மைக்காக சிவச்சாரியார்கள் யாக சாலையில் புனித தீர்த்தக்குடங்களை வைத்து பல்வேறு பூஜைகள் செய்தனர். மூலவருக்கு அபிஷேகங்கள் நடந்தன. கோயில் டிரஸ்ட் நிர்வாகி வாசுதேவி பாபாவின் மகிமை குறித்து பேசினார். நிர்வாகிகள் முத்துசெல்வம், நேரு ஏற்பாடுகளை செய்தனர்.