திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் புனித ஆரோக்கிய அன்னை திருவிழா கொடியேற்றம் ஆக.29ல் நடந்தது. தினமும் மாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும் இரவு 8 மணிக்கு தேர்பவனியும் பாவ சங்கீர்த்தனம், நோயாளிகள் மந்திரிப்பு நிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு நடந்தது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம், திருப்பலி நடத்தி துவக்கி வைத்தார். மிக்கேல்அதிதூதர், புனிதஅருளானந்தர், அமலஅன்னை, புனிதஆரோக்கிய அன்னை ஆகிய தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. ஏற்பாடுகளை பாதிரியார் டார்வின் எஸ்.மைக்கிள், மற்றும் ஓரியூர் பங்கு மக்கள் செய்திருந்தனர். நேற்று மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது.