Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேச்சைக் குறைக்கலாமே! பொறுமையுடன் இருங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எதை மறுத்தாலும் இதை மறுக்காதீர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
12:06

காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க திருவண்ணாமலையில் இருந்து ஒரு புரோகிதர் மாதம் தவறாமல் வந்து விடுவார். ஒருமுறை அவர் பெரியவரைத் தரிசிக்க வரிசையில் காத்து நின்றார். அப்போது பெரியவர் தன் சீடரை அழைத்து, “அந்த திருவண்ணாமலை புரோகிதரை வெளியே போகச் சொல்,” என்றார். சீடருக்கு காரணம் புரியவில்லை. அவர் தகவலை புரோகிதரிடம் சொல்ல அதிர்ந்து போன அவர், தயங்கியபடியே வெளியேறி, ஆனால் மடத்து வாசலில் நின்று கொண்டே இருந்தார். விஷயம் பெரியவர் கவனத்துக்கு வரவே சீடரை அழைத்து, “அவன் ஊரிலிருந்து கிளம்பும்போது, ஒரு வீட்டில் இருந்து வந்தவர்கள் தங்கள் வீட்டில் ஒரு இறப்பு நிகழ்ந்து விட்டதாகக் கூறினர். காரியங்கள் செய்வதற்கு அழைத்தனர். அவனோ அதைச் செய்யாமல் மறுத்து விட்டு மடத்துக்கு போவதாக சொல்லி வந்து விட்டான். அவனை உடனே ஊருக்குப் போய் அந்தக் காரியங்களை உரிய நாட்களுக்குள் முடித்துக் கொடுத்து, சுபநிகழ்வு முடிந்த பின் தரிசனத்துக்கு வர வேண்டும் என சொல்லி விடு,” என்றார். இதை சீடர் அவரிடம் போய் சொல்லவே, ஊரில் நடந்த விஷயம் இந்த மகானுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டார் புரோகிதர். பெரியவரின் உத்தரவுப்படி ஊருக்குப் போய், நடந்ததை அவர்களிடம் சொல்லி, அந்த குடும்பத்திற்கு தேவையானதை செய்து முடித்த பிறகு ஒருநாள் மடத்துக்கு வந்தார். அவரை அழைத்த பெரியவர், “சுபகாரியங்களைக் கூட நீ மறுக்கலாம். ஆனால் இதுபோன்ற துக்க நிகழ்வுகளுக்கு வரமாட்டேன் என புரோகிதரான நீ மறுக்கக்கூடாது. மேலும் இந்நிகழ்வுகளுக்கு சம்பாவனையும் (பணம்) கேட்கக்கூடாது. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாங்கியதிலும் ஒரு பகுதியை சிவன் கோவிலில் தீபம் ஏற்றும் செலவுக்கு கொடுக்க வேண்டும். அப்போது தான் நீ படித்த வேதங்களுக்கு மரியாதை,” என அறிவுரை கூறி பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார். புரோகிதர்கள் இனி துக்க நிகழ்வுகளை மறுக்கமாட்டீர்கள் தானே! (மகான் காஞ்சிப்பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar