பதிவு செய்த நாள்
08
ஜூன்
2016
09:06
திருத்தணி: ஊராட்சியில் நடந்த கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, மாம்பாக்கசத்திரம் கிராமத்தில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று, காலை 8:00 மணிக்கு, முக்கோட்டி அம்மன் கோவிலில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், பூகரகம் ஊர்வலமும் நடந்தது. மாலையில் நடந்த பூகரகத்தின் போது, கிராம வாசிகள் ஒருவர் மீது ஒருவர், மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்ந்தனர். இரவு 8:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கை அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பூகரகத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், இரவு நாடகமும் நடந்தது.