Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாயல்குடி வருடாபிஷேக விழா காரைக்காலில் வரும் 19ம் தேதி மாங்கனி திருவிழா துவங்குகிறது விழாவிற்கான பந்தல் அமைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது காரைக்காலில் வரும் 19ம் தேதி மாங்கனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணன்பெருமாள் கோயில் மஹாஸம்ப்ரோக்ஷ்ணம் திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அண்ணன்பெருமாள் கோயில் மஹாஸம்ப்ரோக்ஷ்ணம் திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2016
06:06

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் என்றழைக்கப்படும் அண்ணன்பெருமாள் கோயில் கிராமத்தில் அருள்மிகு அலர்மேல் மங்கை நாயிகா ஸமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ ப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

108 வைணவத் திருத்தலங்களுல் ஒன்றானதும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான இந்த தலத்தில் தான் ஞானஸ்வரூ பியான குமுதவல்லி நாச்சியார் அவதரித்தார்.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மஹாஸம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற்றது.இதனை முன்னி ட்டு கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. சர்வசாதகம் பார்த்தன்பள்ளி சேஷாத்திரி பட்டாச்சாரியார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். இன்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து 6: 30 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து பெருமாள், தாயார் சன்னதி விமானங்கள் மற்றும் ராஜ கோபுரத்தை அடைந்தது. 7:30 மணிக்கு, மிதுன லக்கனத்தில் மாதவ பட்டாச்சாரியார் தலைமையிலானோர் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற மஹாஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, சீர்காழி எம்.எல்.ஏ.பாரதி, உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை சே வித்தனர். டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மஹாஸம்ப்ரோக்ஷணத்திற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோபி, கோயில் பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar