பதிவு செய்த நாள்
09
ஜூன்
2016
11:06
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது. மகுடஞ்சாவடி ஒன்றியம், இடங்கணசாலை, பரமக்கவுண்டனூரில், அய்யனாரப்பன், கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம், இன்று காலை, 7.30 மணிக்கு மேல், 9 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக, நேற்று காலை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சித்தர்கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து, அய்யனாரப்பன் கோவில் வரை, ஊர்வலம் வந்தனர்.