Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரம்மரிஷி பட்டம்! வேதங்களின் தேன் கிண்ணம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆர்வத்துடன் செயலாற்று!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
04:06

*வாழ்க்கை என்பது அனுபவத்தின் வெளிப்பாடு. மனிதனின் ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் புதுமையான அனுபவத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. ஆர்வத்துடன் செயலில் ஈடுபடாமல் வாழ்வில் எந்தவித அனுபவமோ, வளர்ச்சியோ உண்டாகாது.
*மனித முயற்சி அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது நம்பிக்கையே. மனிதனின்
நம்பிக்கையைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது. தன்னம்பிக்கையுடன், தெய்வ நம்பிக்கையும் சேரும் போது வாழ்வில் முன்னேற்றம் காண்பது உறுதி.
*குறிக்கோள் இல்லாத வாழ்வு வாழ்வாகாது. குறிக்கோள் என்பது சுயநலமற்றதாகவும், உயர்ந்ததாகவும், விசாலமானதாகவும், பெருந்தன்மை கொண்டதாகவும், பொதுநலம் மிக்கதாகவும் அமைய வேண்டும்.
*தன்னுடைய கருத்தே சரியானது என்று எண்ணக்கூடாது. வாக்குவாதம், அதிக எழுச்சி, சண்டை, கோபம் ஆகியவற்றை பேச்சில் தவிர்க்க வேண்டும். சொல்ல விரும்புவதை தெளிவாக அதே சமயத்தில் அமைதியாக தெரிவிக்க வேண்டும்.
*வழிபாடு என்பது தொடக்கத்தில் கடவுளுக்கு ஓர் இலையோ, மலரோ,
சிறிதளவு தண்ணீரோ, பிடி சோறோ படைப்பதாக இருக்கும். பக்குவம் அடையும் போது தன்னையே முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிக்கும் விதத்தில் உயர்ந்து விடும்.
*பக்தியில் ஈடுபட்டால் கடவுளைத் தவிர வேறெந்த விஷயத்திலும் ஈடுபடக் கூடாது என்பதில்லை. அறிவியல், கலை, இலக்கியம், குடும்பம் என வாழ்வின் மற்ற அம்சங்களையும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
*கடவுளிடம் முழுமையாகச் சரணடைந்து அவரது கைகளில் நம்மை ஒப்படைப்போம். அப்போது அவர் தன்னுடைய சொந்த சக்தியை நமக்குள் செலுத்தி வாழ்வை மலரச் செய்வார்.
*வாழ்வில் குறுக்கிடும் துன்பத்தை வாழ்த்தக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலமே கடவுளின் அருள் ததும்பும் முகத்தைக் காணும் பேறு பெறுவீர்கள்.
*தியாகம் செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பெருமைக்காக தியாகம் செய்வது கூடாது. மனிதர்கள் அனைவரும் நலம் பெறவும், கடவுளுக்காகவும் தியாகம் செய்ய முயலுங்கள்.
*நீங்கள் தர்மத்தின் கையில் ஒரு கருவியாக இருங்கள். உயிர்களின் மீது இரக்கம்
காட்டுவதும், பிறரது நன்மைக்காக உயிரைத் தியாகம் செய்வதும் தர்மத்தின் வெளிப்பாடே. போர்க்களத்தில் பகைவனைக் கொல்வதும் தர்மத்தில் தான் அடங்கும்.
*கண்களில் கருணையும், பேச்சில் இனிமையும் தெய்வத்தின் சுபாவங்கள். இந்த உயர்பண்புகளை ஏற்றுக் கொள்பவன் மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்கிறான்.
*பிறருடைய குறைகளைப் பற்றி ஒரு போதும் சிந்திக்க வேண்டாம். இதனால் மனம், உடல் இரண்டும் கேடு அடைகிறது. மன அமைதி மிக்கவர்களே தங்களின் குறைகளைத் திருத்திக் கொள்வதில் அக்கறை கொள்வர்.
*கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே இல்லை. உலகில் நடக்கும் செயல்கள் அனைத்தும் நல்லதையோ அல்லது நல்லதை ஏற்படுத்தும் முயற்சியாகவோ மட்டுமே இருக்கின்றன.  (மகான் அரவிந்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar