பள்ளிவாசலின் மகத்துவம் குறித்து நபிகள் நாயகம் கூறியுள்ள கருத்துக்களைக் கேளுங்கள். “எவர் பள்ளிவாசலை கட்டுகிறாரோ அவருக்காக அப்பள்ளிவாசலைப் போன்ற வீடு சொர்க்கத்தில் கட்டப்படுகின்றது. இந்த மாநிலத்தில் எந்தப் பகுதியில் பள்ளிவாசல் கட்டப்படுகின்றதோ, அந்தப் பகுதி தான் இறைவனுக்கு மிகப் பிரியமான இடமாகும். எந்தப் பகுதியில் கடைவீதி அமையப் பெற்றதோ அந்தப் பகுதி தான் இறைவனுக்கு மிகவும் கெடுதியான இடமாகும். கியாம நாளில் அல்லாஹ்வின் அர்ஷு நிழலில் ஏழு வகை மனிதர்கள் இருப்பார்கள். எவருடைய உள்ளம் பள்ளிவாசலையே நாடுகின்றதோ, அவர் ஏழு வகையினரில் ஒரு வகையைச் சேர்ந்தவராக இருப்பர். அல்லாஹ்வின்(பள்ளி வாசல்களில் தொழுகை நிலைபெற) மனித நடமாட்டம் உள்ளவர்கள் ல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். மஸ்ஜிதிலே(பள்ளிவாசல்) உட்கார்ந்திருக்கும் காலமெல்லாம் அங்கேயிருந்து ஒருவர் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் அல்லாஹ் சுவர்க்கத்திலே பல அந்தஸ்துகளை வழங்குகின்றான். அவர் மீது வானவர்கள் ஸலவாத்து சொல்கின்றனர். அவர் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. அவரை விட்டு பத்து தீமைகள் அழிக்கப்படுகின்றன.