ஜம்மு : ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ண தேவி கோயில் அருகே ராணுவ உடையில் சந்தேகத்திற்குரிய முறையில் 2 பேர் சுற்றி திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களை பற்றி விபரங்களை விசாரித்து வருகின்றனர். கோயிலில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இவர்கள் வந்தார்களா என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.