காரைக்கால் மாங்கனி திருவிழா பொம்மைகளுக்கு வர்ணம் பூசும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2016 11:06
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும்படும் பழமை வாய்ந்த பொம்மைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இதில், நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த 4ம் தேதி மாங்கனி திருவிழா தொடங்கியது. வரும் 17ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் 18ம் தேதி காரைக்கால் அம்மையார், பரமதத்தர் திருகல்யாணம், 19ம் தேதி சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கும். பிரசித்தி பெற்ற இத்திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். 30 நாட்களும் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தடுக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படும். சாலையின் இரு பக்கமும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதேபோல், விழாவின் போது ஊர்வலத்தில் பயன்படுத்தும் பழமை வாய்ந்த பொம்மைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.