Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம் ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » ஏழாம் திருமறை
முதல் மூவரில் ஒருவர் சுந்தரர் | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 செப்
2011
04:09

பன்னிரு திருமுறைகளில் 7ம் திருமுறை சுந்தரரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும்.

63 நாயன்மார்களில் முதல் மூவரில் ஒருவர் சுந்தரர்.  இவரது அழகில் மயங்கிய சிவபெருமான் இவரை சுந்தரா என்று அழைத்ததுடன், இவருக்காக  தூது சென்ற பெருமைக்குரியவர்.  திருநாவலூர் (தற்போது விழுப்புரம் மாவட்டம்)என்னும் திருத்தலத்தில், ஆதிசைவர் மரபில், சடையனாருக்கும்,  இசைஞானியாருக்கும்  சுந்தரர் 8ம் நூற்றாண்டில் தோன்றினார். இவரது இயற்பெயர் நம்பியாரூரார். ஒரு முறை ஆரூரர் வீதியிலே, விளையாடிக் கொண்டிருந்தபொழுது அங்கு வந்த திருமுனைப்பாடி அரசர்  நரசிங்கமுனையர்  ஆரூரரைக் கண்டார். அக்குழந்தையை தம்மோடு அழைத்து செல்ல முடிவெடுத்து,குழந்தையைத் தூக்கிக் கொண்டு, சடையனார் இல்லத்திற்குள் சென்றார்.  சடையனாரும் நரசிங்கமுனையரும் பால்ய சிநேகிதர்கள்.  அரசன் சடையனாரிடம், நண்பா! உங்கள் குழந்தையின் அழகில் நான் பேரன்பு பூண்டேன். அதனால் இக்குழந்தையை மகனாக வளர்க்கும் பாக்கியத்தை எனக்குத் தர வேண்டும், என்று கேட்டான்.  பெற்றோர்கள்  மனநிறைவோடு மகனை அரசருடன் அனுப்பி வைத்தனர். ஆரூரர்,  சின்னஞ்சிறு வயதிலேயே,அரண்மனையில் அரசர்க்குரிய அத்தனை கலைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்று அரசகுமாரனைப்போல் வாழத் தொடங்கினார்.  பெற்றோர்கள், ஆரூரருக்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர். திருநாவலூருக்கு அடுத்தாற் போல் புத்தூர் என்ற ஊரிலுள்ள, சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் புதல்வியை ஆரூரருக்குப் பார்த்து மணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.  திருமணத்திற்கு முதல் நாள் ஆரூரர் திருநாவலூரில் இருந்து வெண்புரவியில் புத்தூருக்கு புறப்பட்டார். மணநாள் காணப்போகும் ஆரூரரை சிவபெருமான் தடுத்தாட்கொள்ளத் திருவுள்ளங் கொண்டு,  ஒரு முதிய அந்தணர் வடிவம் தாங்கி மணப்பந்தலுக்குப் புறப்பட்டார்.  அங்கு எழுந்தருளும் போதே, நான் கூறப்போகும் இம்மொழியை யாவரும் கேளுங்கள் என்று கூறிக்கொண்டேதான் வந்தார் எம்பெருமான்!  நம்பியாரூர், பணிவன்போடு ஐயனே! தங்கள் வரவு நல்வரவாகுக!   என்று கூறினார்.

அதற்கு அம்முதியவர், அப்பனே! உனக்கும் எனக்கும் முற்காலத்தேயுள்ள ஓர் தொடர்பு காரணமாக, ஒரு பெரும் வழக்குள்ளது. அதை தீர்த்து விட்டு, நீ உன் திருமணத்தை நடத்து என்றார். அதைக் கேட்டு, அனைவரும் திகைக்க சுந்தரர் மட்டும் சற்றும் கலங்காமல், ஐயனே! உமது வழக்கை  முடித்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன். வழக்கை இயம்புவீராக! என்றார். வேதியர், அந்த அவையில் உள்ளோரை நோக்கி, அந்தணர் குலத்தோரே! இந்நாவலூரான் என் அடிமை! என்றார். எனக்கு இவனது பாட்டன், எழுதிக்கொடுத்த அடிமை ஓலை இதோ  என்று தம் கையிலிருந்த நீட்டோலையைக் காண்பித்தவாறே   சினம் பொங்கக் கூறினார். ஆரூரர் புன்னகை தவழ,  ஐயா! வேதியரே! உமக்கு நன்றாக பித்து பிடித்திருக்கிறது. இல்லாவிடில், குற்றமற்ற என்னை உங்களுக்கு அடிமை என்பீரா!.அத்துடன் நீர் என்ன பித்தனோ? என்றும் கேட்டார். இறைவன் சினம் பொங்க வீணாக பேசி என் கோபத்தை கிளறாதே! மணவறையில் உட்கார்ந்து கொண்டு வித்தகம் பேசுகிறாயே எதற்கு? உன் கடன் எனக்குப் பணிசெய்து கிடப்பதே என்பதை நினைவிற் கொள்! என்றார். மனம் குழம்பிய சுந்தரர்.  முதியவரிடம் எங்கே அடிமை ஓலையைக் காட்டுங்கள் என்றார். தனிப்பட்ட முறையில் உன்னிடம்  கொடுக்க முடியாது.  அவைக்களம் வா!  என்றார். நம்பியாரூரர் கோபத்துடன் அந்தணர் கையிலிருந்த  ஓலையைப் பிடுங்கி, சுக்கு சுக்காகக் கிழித்தெறிந்தார். அதற்கு பெரியவர் இது கொடிய அநியாயம் என்று முறையிட்டார். அப்பொழுது திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் சிலர்,  நீவிர் யார்?என்று கேட்டனர். நான் அருகிலுள்ள வெண்ணெய்நல்லூரில் பிறந்து வளர்ந்தவன். இவன் பாட்டன் இவன் எனக்கு அடிமை என்று எழுதிக் கொடுக்காவிடில், எதற்காக நம்பியாரூரன்,  என் கையிலிருந்த ஓலையைக் கிளித்தெறிய வேண்டும்? இவன் என் அடிமைதான் என்பதை உறுதிப்படுத்தி உலகறியச் செய்ய இதைவிட எங்களுக்கு ஆதாரம் வேறென்ன வேண்டும்? என்று விடையளித்தார் எம்பெருமான்! அப்படியென்றால், இந்த வழக்கை வெண்ணெய்நல்லூரிலேயே தீர்த்துக் கொள்ளலாம் வாரும் என்று கூறினார் சுந்தரர்! அங்ஙனமே ஆகட்டும். இப்போது நீ கிழித்த ஓலை நகலேயாகும். மூல ஓலையைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். வெண்ணெய்நல்லூரிலுள்ள அவையோர் முன்னால் மூல ஓலையைக் காண்பித்து நீ என் அடிமை என்பதை நிரூபிக்கிறேன் என்ற மறையோன், தள்ளாதவரைப் போல தடியை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார்.

ஆரூரரும் மற்ற அனைவரும் பெரியவருடன்  வெண்ணெய்நல்லூர் அவையை வந்தடைந்தனர். அவையோர் முன்னால் பெரியவர் அந்தணர்களே! இந்நாவலூரன் என் அடிமை! அதற்கு சான்று இந்த மூலஓலை என்று கூறி அந்த ஓலையை எடுத்து அவையோரிடம் கொடுத்தார். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.  திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரன் என்னும் பெயருடைய நான், திருவெண்ணெய்நல்லூர் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும் என் வழிவரும் மரபினோரும் வழிவழியாய் இவருக்கு அடிமை தொழில் செய்து வருவோம் என்பதற்காக உள்ளும் புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்தேன். இதற்கு இஃது என் கையெழுத்து. இம்மணிவாசகத்தைக் கணக்கன் வாசிக்கக் கேட்ட அவையோர்,  அந்தணர் கூறுவது முறைதான் என்று ஒப்புக்கொண்டனர். ஆரூரன் அந்தணருக்கு அடிமையாய்ப் பணிசெய்வது தான் கடமை, என்று தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள். ஆரூரரும் மறையவர் தீர்ப்புப்படி அந்தணருக்கு அடிமையாகி, அவையோர் தீர்ப்புக்கு தலை வணங்கினார். அவையோர், முதியவரிடம், இவ்வூரில் உமது இருப்பிடம் எங்கே என்று எங்களுக்குக் காட்டுவீராக என்றனர். எம்பெருமான், அவர்களை அழைத்துக் கொண்டு  அவ்வூரிலுள்ள திருவட்டுறை என்கின்ற திருக்கோவிலுக்குள் அழைத்து சென்று மறைந்து விட்டார். அந்தணரை தேடிய சுந்தரர் ஆலயம் முழுவதும் வலம் வந்தார். எங்கு தேடியும் அவரை காணவில்லை. அப்பொழுது கோயிலுள் பேரொளி பிறந்தது. இறைவன்  உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார்.  ஆரூரானுக்கு ஆனந்தக் காட்சியளித்த அம்மையப்பர் திருவாய் மலர்ந்து,  அன்பிற்கினிய ஆலால சுந்தரா! எம்மை நீ தமிழ்ப்பாக்களால் அர்ச்சனை செய்வாயாக! என்று அன்பு கட்டளை இட்டார். அதற்கு சுந்தரர்,  என்னை ஆண்டருளிய அருட்பெருங்கடலே! யான் யாதும் அறிந்திலேனே! என்று சுந்தரர் விண்ணப்பித்து, உருகி நின்றார். இறைவன் தம்பிரான் தோழரைப் பார்த்து, உன்னை ஆட்கொண்ட போது எம்மை பித்தா! என்று அழைத்தாய், ஆதலின் பித்தா என்று அடி எடுத்துப்பாடுவாயாக!  என்று திருவாய் மலர்ந்து அருளினார். சுந்தமூர்த்தி சுவாமிகள், உள்ளமும் உடலும் பொங்கிப் பூரிக்க ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறே, பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா! என்று அடி எடுத்து, தடுத்தாட்கொண்ட தம்பிரான் மீது திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கினார். சுந்தரரின் இசைத்தமிழ் இன்ப வெள்ளத்திலே மூழ்கி மிதந்த எம்பெருமான், சுந்தரர்க்கு திருவருள் புரிந்து மறைந்தார். சுந்தரர், சிந்தை மகிழ திருநாவலூர் திரும்பினார். அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் மீதும் திருப்பதிகங்களைப் பாடினார்.

 
மேலும் ஏழாம் திருமறை »
temple news
சுந்தரர் பாடிய 7ம் திருமுறையில் மொத்தம் 1026 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. ... மேலும்
 
temple news
49. திருமுருகன் பூண்டி (அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி,கோயம்புத்தூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar