விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் ÷ காவிலில் திருக்குட நீராட்டு 14ம் ஆண்டு துவக்க விழா, நேற்று துவங்கியது. விழாவினையொட்டி கடந்த 13ம் தேதி கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு 1008சங்கு அபிஷேகமும், சிறப்பு வேள்வி யாகமும் நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பலரும், ஆதிவாலீஸ்வரருக்கு சங்கு அபிஷேகம் செய்தனர். பகல் ௧௨:00 மணியளவில் திருக்கலச அபிஷேகமும், பின் சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாரா தனை நடந்தது. மாலை 4மணியளவில் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வர பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 7 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது.