பகவதியம்மன் மற்றும் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2016 11:06
மொடக்குறிச்சி: கொடுமுடி வட்டராம் வெள்ளோட்டம் பரப்பு வடுகனூர் பகுதியில், பிரசித்தி பெற்ற பகவதியம்மன் மற்றும் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. 75 ஆண்டுகால பழமையான கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.