பதிவு செய்த நாள்
17
ஜூன்
2016 
11:06
 
 பாக்கம்: பாக்கம், எல்லையம்மன் கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பாக்கம் கிராமத்தில் உள்ளது எல்லையம்மன் கோவில். இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம், கடந்த 8ம் தேதி முகூர்த்த கம்பஸ்தாபனத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 14ம் தேதி, காலை மகா கணபதி பூஜையும், மாலை வாஸ்து சாந்தியும், முதல் கால யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம், காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் கலசங்கள் புறப்பாடு நடந்தது. பின், காலை 9:40 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில், பாக்கம், திருநின்றவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள திரளான கிராம வாசிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜைநடைபெறும்.