அரூர்: மொரப்பூர் அருகே, ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த கொசப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. நேற்று முன்தினம் கொடியேற்றமும், நேற்று காலை சுப்ரபாத சேவையும் நடந்தது. பின்னர் கோபுர கலச சம்ப்ரோக்?ஷண மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 11 மணி முதல், 12 மணி வரை, ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய சுவாமி திருக்கல்யாணம் நடந்தேறியது. இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது.