கன்னிவாடி: மணியகாரன்பட்டியில் மகாதி துர்க்கை அம்மன் கோயில் தீர்த்தாபிஷேக விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுடன் தீர்த்தாபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு காலை முதல் தொடர் அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.