ஐ.ஆர்.சி.டி.சி.,யின் கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் கூறியதாவது:ஜூன், 23ல் மதுரையில் புறப்படும் சுற்றுலா ரயில், சென்னை வழியாக குஜராத் மாநிலம் செல்லும். அங்கு, கிருஷ்ணர் வீற்றிருக்கும் துவாரக் நாத் கோவில், பேட் துவாரகா, டாக்கோர் துவாரா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில், நாத் துவாரகா, காங்ரோலி துவாரகா ஆகிய இடங்களுக்கு சென்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 11 நாட்கள் உடைய இந்த சுற்றுலாவுக்கு, 9,185 ரூபாய் கட்டணம். கூடுதல் விவரங்களுக்கு, 9003140681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -