வசந்த பஞ்சமி: பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2026 01:01
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பான விழாக்களில் ஒன்றாகும். இது ரிஷி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி நாளில் வீடுகளிலும், கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இன்று வசந்த பஞ்சமியை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம், பிரயாகராஜில், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
வசந்த பஞ்சமி விழாவை முன்னிட்டு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது; வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பாக்கியம் பெற்ற அனைத்து பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். புனித சங்கமத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நம்பிக்கை நீராடல் அனைவருக்கும் மங்களகரமான பலன்களைத் தரட்டும், அனைவரின் மனப்பூர்வமான விருப்பங்களும் நிறைவேறட்டும் என்று அன்னை கங்கையை நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு கூறினார்.