குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு 21.5 சவரன் கிரீடம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2026 04:01
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு, தங்க நகை வியாபாரியும் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவருமான அஜய்குமாரின் மனைவி சினி என்பவர், 21.5 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். கோவில் கொடிக்கம்பத்தின் கீழ் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக குழு நிர்வாகி அருண்குமார், கிரீடத்தை பெற்றுக் கொண்டார். குருவாயூர் கோவிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உட்பட பலர், தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.