பதிவு செய்த நாள்
20
ஜூன்
2016
10:06
திருப்பதி: திருமலையில், ஜேஷ்டாபிஷேக விழாவின் நிறைவு நாள் நேற்று நடந்தது. காலையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, சம்பங்கி பிரகார மண்டபத்தில், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. முதல் நாளில், களையப்பட்ட தங்க கவசத்தை சுத்தம் செய்து, அர்ச்சகர்கள் அதற்கு ஹோமம், பூஜை செய்து, மீண்டும், உற்சவ மூர்த்திகளுக்கு அணிவித்தனர். இந்த தங்க கவசம், இனி அடுத்தாண்டு ஆனி மாதம் மட்டுமே அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்படும். இந்த உற்சவத்திற்காக, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம் உள்ளிட்ட சேவைகளை, தேவஸ்தானம் ரத்து செய்தது.