காரைக்குடி: காரைக்குடி சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோவில் ஆனி தேர் விழாவில் 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடந்தது.ஆனி திருவிழா ஜூன் 15 ல் துவங்கியது. 5ம் நாளான நேற்று வீரசேகர உமையாம்பிகை தபசு காட்சியில், 63 நாயன்மார் வீதி உலா நடந்தது. கோவிந்தராஜன் தலைமையில் ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவையாறு, புதுக்கோட்டையை சேர்ந்த 63 தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடந்தது. நாயன்மார்கள் அம்பாளின் தபசை தணிக்கும் நிகழ்ச்சி, திருக்கல்யாணம் நடந்தது. ஜூன் 23ல் தேரோட்டம் நடக்கிறது.